சேலம் இரும்பாலை அருகே கௌதம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பர்கள் தனுஷ் மற்றும் மூர்த்தி போதையில் கல்லால் தாக்கி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சேலம் அருகே இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக நண்பர்களே போதையில் அடித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலைக்கு சொந்தமாக 2000 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இந்நிலையில் இரும்பாலை அருகே சிட்டனூர் பகுதியை ஒட்டியுள்ள அந்த நிலத்தில் சடலம் ஒன்று தலை இல்லாமல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ந்துபோன மாடு மேய்ப்பவர்கள் இரும்பாலை காவல் நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், சேலம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான கௌதம் என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் கோவில் திருவிழாவின்போது தனது அண்ணன் சிவமூர்த்தியை மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தகவல் : NEWS18TAMIL
