Home Uncategorizedஇளம்பெண்ணுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. சென்னை ஈசிஆரில் பரபரப்பு சம்பவம்!

இளம்பெண்ணுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. சென்னை ஈசிஆரில் பரபரப்பு சம்பவம்!

by bait
0 comments

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோதும் அவ்வப்போது அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறுவதாகவே கூறப்படுகிறது.

சென்னையில் இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் சென்ற இளைஞரிடம் வம்பிழுத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கிழக்கி கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் புள்ளிங்கோக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோதும் அவ்வப்போது அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறுவதாகவே கூறப்படுகிறது. இந்த நிதியில் பனையூர் பகுதியில் மூன்று பேர் கும்பல் அட்டூழியம் செய்ததால், போலீஸ் ட்ரீட்மெண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பனையூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வசந்த் என்பவர் அங்குள்ள தனியார் ஃபர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில், உத்தண்டி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், ஒரே இருசக்கர வாகனத்தில் உத்தண்டியில் இருந்து பனையூர் நோக்கி சென்றுள்ளனர். அவ்வழியாக இளைஞர்கள் 3 பேர் மது போதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் திடீரென பெண்ணுடன் சென்ற வசந்தின் இரு சக்கர வாகனத்தை இடிப்பது போன்று மிரட்டியுள்ளனர்.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment