Home Uncategorizedஇரு சக்கரவாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் – இராஜபாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்

இரு சக்கரவாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் – இராஜபாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்

by bait
0 comments

சூரிய பிரகாஷ் எதிர் தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார், மேலும், ஒரு இளைஞரை தாக்கி கழுத்தில் கயிறை போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர்  இருளப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்  இவரது மகன் சூரிய பிரகாஷ் (24). இவர் அவ்வப்போது குடிபோதையிலும் கஞ்சா போதையிலும் முகவூர் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் தளவாய்புரம் காவல் நிலையத்தில் சில வழக்குகளும் இவர் மேல் பதியப்பட்டு போலீசார் எச்சரித்தும் அனுப்பியுள்ளனர் .

அதே முகவூர் இருளப்பசாமி கோவில் தெரு பகுதியை சேர்ந்த மற்றொரு குரூப்பாக செயல்படும் சில இளைஞர்களுக்கும், சூரியபிரகாஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூரியபிரகாஷ்  வீட்டிற்கு சில நபர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். சூரிய பிரகாஷ் எதிர்தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார், மேலும், ஒரு இளைஞரை தாக்கி கழுத்தில் கயிறை போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால்  இரு தரப்பிற்கு மோதல் வெடித்துள்ளது, உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இந்த நிலையில்,  சூரியபிரகாஷ் தன் சித்தப்பா குருசாமி ( 48 ) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு முகவூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து தான் குடியிருக்கும் இருளப்பசாமி கோவில் தெரு அருகே சென்று கொண்டிருந்த போது, முகத்தில் முகமூடி அணிந்து வந்த நான்கு இளைஞர்கள் சூரிய பிரகாஷ் கழுத்து மற்றும் முகப்பகுதியில் சரமாரியாக வெட்டி உள்ளனர். தடுக்கச் சென்ற சூரிய பிரகாஷின் சித்தப்பா குருசாமிக்கு தோள்பட்டை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment