Home Uncategorizedஇயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போலீஸில் சிக்கிய போதை கும்பல்

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போலீஸில் சிக்கிய போதை கும்பல்

by bait
0 comments

ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த 29ஆம் தேதி மாலையில் தனது உறவினர் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, அச்சுந்தன்வயல் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே, இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சென்றபோது, அங்கு மறைவான இடத்தில் அமர்ந்து 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். தனியாக வந்த பெண்ணை கண்டதும், மது போதையில் இருந்த அந்த கும்பல் அவரிடம் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

தனியாக மாட்டிக் கொண்டதால் போதை கும்பலிடம் இருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடியாமல் போகியுள்ளது. தனியாக சிக்கிய பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்ற 4 பேரும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment