Home Uncategorizedஆடி காரில் வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் கைது..!

ஆடி காரில் வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் கைது..!

by bait
0 comments

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆடி காரில் வந்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர்  

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது/ இந்த நிலையில் காவல்துறையினர் கல்லூரி வளாகங்களில்  ரகசிய  விசாரணை செய்து வந்த நிலையில் ஆடி காரில் கஞ்சா விற்பனை செய்வது குறித்த தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து ஆடி காரில் வந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது கையும் களவுமாக அவரை பிடித்தனர். பிடிபட்டவர் பெயர் கடலூரை சேர்ந்த கோகுல கண்ணன் என்றும் அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அவர் விற்பனை செய்து உள்ளதாகவும் சொகுசு காரில் சென்று நேரடியாக விற்பனை செய்வதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தகவல் : WEBDUNIA

You may also like

Leave a Comment