தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த சிவா (48) என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவர் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மது பாட்டில்களை மறைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்கள், ரூ. 66,500 மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP